ஜல்லிக்கட்டில் காளையின் பெயர், ஊர் மட்டுமே குறிப்பிடப்படும்: அமைச்சர் மூர்த்தி பேட்டி


ஜல்லிக்கட்டில்  காளையின் பெயர், ஊர் மட்டுமே குறிப்பிடப்படும்: அமைச்சர் மூர்த்தி பேட்டி
x

குறைந்தபட்சம் 1 ,000 காளைகளாவது அவிழ்க்கப்படுவதற்கான ஏற்பாடுகளை இந்த ஆண்டு செய்துள்ளோம் என்று அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.

மதுரை,

தமிழகத்தில் மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் பார்வையாளர்களை மிகவும் கவர்ந்த போட்டிகளாக கருதப்படுகின்றன. புகழ்பெற்ற இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் மதுரை மட்டுமில்லாது தமிழகம் முழுவதும் உள்ள சிறந்த காளைகள் பங்கேற்கும்.இதில் அவனியாபுரத்தில் நாளையும்(15-ம் தேதி), பாலமேட்டில் 16-ம் தேதியும் அலங்காநல்லூரில் 17-ம் தேதியும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளன.இந்த நிலையில், மதுரையில் நாளை நடைபெறவுள்ள அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தில் அமைச்சர் மூர்த்தி, மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா, மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி வசந்த் ஆகியோர் பார்வையிட்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மூர்த்தி ,

குறைந்தபட்சம் 1 ,000 காளைகளாவது அவிழ்க்கப்படுவதற்கான ஏற்பாடுகளை இந்த ஆண்டு செய்துள்ளோம்.இந்த ஆண்டு காளைகள் தள்ளுவாடியாகாமல் இருப்பதற்காக வாடிவாசல் பின் கதவு பெரிதாக அமைக்கப்பட்டு புதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மொத்தம் 1000 டோக்கன்கள் மட்டுமே வழங்கப்படும். 3400 காளைகள் ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே காளைகளை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட உள்ளது.

அவனியாபுரத்தில் தகுதியான மாடுபிடி வீரர்கள் 650 பேர் இருக்கிறார்கள். தேர்வுகள் செய்து 600 மாடுபிடி வீரர்கள் நாளை ஜல்லிக்கட்டில் களம் இறக்கப்படுகிறார்கள்.

ஜல்லிக்கட்டு காளைகளின் பெயர், ஊரை மட்டுமே குறிப்பிடுவார்கள். மொத்தம் 1000 காளைகள் தான் ஜல்லிக்கட்டு போட்டியில் அவிழ்க்கபடும் இதில் எந்த பாரபட்சமும் கிடையாது" என்று தெரிவித்தார்.


Next Story