சென்னை மெட்ரோ ரெயிலில் ஜூலை மாதத்தில் 53.17 லட்சம் பேர் பயணம்


சென்னை மெட்ரோ ரெயிலில் ஜூலை மாதத்தில் 53.17 லட்சம் பேர் பயணம்
x

சென்னை மெட்ரோ ரெயிலில் ஜூலை மாதத்தில் 53.17 லட்சம் பயணிகள் பயணித்துள்ளனர்.

சென்னை

சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

மெட்ரோ ரெயிலில் கடந்த ஜூலை 1-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை மொத்தம் 53 லட்சத்து 17 ஆயிரத்து 659 பயணிகள் பயணித்துள்ளனர். அதிகபட்சமாக 27-ந்தேதி மட்டும் 1 லட்சத்து 97 ஆயிரத்து 307 பேர் பயணம் செய்துள்ளனர். இதில் க்யூ-ஆர் கோடு பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 16 லட்சத்து 11 ஆயிரத்து 440 பேரும், பயண அட்டையை பயன்படுத்தி 32 லட்சத்து 81 ஆயிரத்து 792 பேரும் பயணித்துள்ளனர்.

மெட்ரோ ரெயில்களில் க்யூ-ஆர் கோடு, பயண அட்டையை பயன்படுத்தி பயணிக்கும் பயணிகளுக்கு 20 சதவீதம் கட்டணத் தள்ளுபடி வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story