கள்ளக்குறிச்சி நகராட்சியில் 30-ந் தேதிக்குள் சொத்து வரி செலுத்தினால் ஊக்கத்தொகை அதிகாாி தகவல்


கள்ளக்குறிச்சி நகராட்சியில் 30-ந் தேதிக்குள் சொத்து வரி செலுத்தினால் ஊக்கத்தொகை அதிகாாி தகவல்
x
தினத்தந்தி 22 April 2023 12:15 AM IST (Updated: 22 April 2023 12:19 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி நகராட்சியில் 30-ந் தேதிக்குள் சொத்து வரி செலுத்தினால் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அதிகாாி தொிவித்துள்ளாா்.

கள்ளக்குறிச்சி

தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் சட்டத்தில் கடந்த 2022-ம் ஆண்டு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு கடந்த 13-ந் தேதி முதல் தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி விதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் சட்டப்பிரிவின்படி சொத்து உரிமையாளர்கள், தங்களது 2023-24-ம் ஆண்டின் சொத்து வரியை வருகிற 30-ந் தேதிக்குள் செலுத்தி 5 சதவீதம் (அதிகபட்சம் ரூ.5 ஆயிரம்) ஊக்கத்தொகை பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். எனவே, கள்ளக்குறிச்சி நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள சொத்துவரி செலுத்தும் உரிமையாளர்கள், உடனடியாக சொத்து வரி செலுத்தி 5 சதவீதம் ஊக்கத்தொகையை பெற்று பயன்பெறலாம். மேற்கண்ட தகவல் கள்ளக்குறிச்சி நகராட்சி ஆணையாளர் குமரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story