கருங்குளம் யூனியனில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு மதிப்பீட்டு மருத்துவ முகாம்


கருங்குளம் யூனியனில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு மதிப்பீட்டு மருத்துவ முகாம்
x
தினத்தந்தி 18 Oct 2023 6:45 PM GMT (Updated: 18 Oct 2023 6:46 PM GMT)

கருங்குளம் யூனியனில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு மதிப்பீட்டு மருத்துவ முகாம் நடந்தது.

தூத்துக்குடி

ஸ்ரீவைகுண்டம்:

கருங்குளம் யூனியன் செய்துங்கநல்லூரிலுள்ள ஆர்.சி. நடுநிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை மற்றும் உபகரணங்கள் வழங்குவதற்கான சிறப்பு மதிப்பீட்டு மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாமை உதவி திட்ட அலுவலர் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார். வட்டார கல்வி அலுவலர் முத்துக்குமார், மரிய ஜெயசீலா, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜ செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். காது மூக்கு, தொண்டை மருத்துவர், மனநல மருத்துவர்கள், கண் மருத்துவர் ஆகியோர் கலந்துகொண்டு மதிப்பீடு செய்தனர். இந்தமுகாமில் 70 மாற்றுத்திறனாளிகள் பயன் பெற்றனர். முகாமிற்கான ஏற்பாடுகளை வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஜெயமேரி அற்புதம், ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் வில்சன் ராஜ், ஆசிரியர் பயிற்றுநர்கள், சிறப்பு ஆசிரியர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.


Next Story