கரூரில், சிறுபான்மையினர் ஆர்ப்பாட்டம்


கரூரில், சிறுபான்மையினர் ஆர்ப்பாட்டம்
x

கரூரில், சிறுபான்மையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூர்

மணிப்பூர் கலவரத்தை கண்டித்து நேற்று காலை கரூர் தலைமை தபால் அலுவலகம் முன்பு கரூர் மாவட்ட சிறுபான்மையினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மறை மாவட்ட தலைவர் பாஸ்கர் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மணிப்பூர் பெண்களை மானபங்கப்படுத்தாதே, வழிபாட்டு தலங்களை எரிக்காதே, மணிப்பூர் பெண்களை காப்போம் என்பன உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு கோஷங்கள் எழுப்பினர்.


Next Story