காயல்பட்டினத்தில் 36 ஆயிரம் பனைவிதை நடும்பணி தொடக்கம்


காயல்பட்டினத்தில்  36 ஆயிரம் பனைவிதை நடும்பணி தொடக்கம்
x
தினத்தந்தி 21 Oct 2022 12:15 AM IST (Updated: 21 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

காயல்பட்டினத்தில் 36 ஆயிரம் பனைவிதை நடும்பணி தொடக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி

ஆறுமுகநேரி:

தூத்துக்குடி மாவட்டம் 36-ம் ஆண்டு விழாவை முன்னிட்டு நேற்று மதர் சமூக சேவை நிறுவனமும், மாவட்ட வன இலாக்காவும் இணைந்து காயல்பட்டினம் வாவு வஜிஹா பெண்கள் கல்லூரிக்கு எதிரே உள்ள கடற்கரை சாலையில் 36 ஆயிரம் பனை விதைகளும், 36 பனைமரக்கன்றுகளும் நடும் பணி தொடங்கியது. நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் கலந்துகொண்டு மரக்கன்று நடும் பணியை தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சியில் மதர் சமூக சேவை நிறுவன இயக்குனர் கென்னடி வரவேற்று பேசினார். மாவட்ட வன அலுவலர் அபிஷேக தோமர், முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில் திருச்செந்தூர் உதவி கலெக்டர் புகாரி, தாசில்தார் சுவாமிநாதன், காயல்பட்டினம் நகர சபை தலைவர் கே. ஏ. எஸ். முத்து முகமது, நகர சபை ஆணையாளர் குமார் சிங், காயல்பட்டினம் பெண்கள் கல்லூரி தலைவர் எஸ். ஏ. செய்யது அப்துர் ரகுமான், ஆறுமுகநேரி நகர பஞ்சாயத்து தலைவர் கலாவதி கல்யாணசுந்தரம், துணைத் தலைவர் அ.கல்யாணசுந்தரம், வீரபாண்டியன் பட்டணம் பஞ்சாயத்து தலைவர் எல்லமுத்து மற்றும் காயல்பட்டினம் பெண்கள் கல்லூரி மாணவிகளும், வீரபாண்டியன் கட்டணம் செயின்ட்தாமஸ் பள்ளியின் பசுமை படையினரும், காயல்பட்டினம் எல்.கே. மேல்நிலைப்பள்ளி மாணவர்களும் கலந்து கொண்டனர்.


Next Story