காயல்பட்டினத்தில் பிரீமியர் லீக் கால்பந்து போட்டி பரிசளிப்பு விழா


காயல்பட்டினத்தில் பிரீமியர் லீக் கால்பந்து  போட்டி பரிசளிப்பு விழா
x
தினத்தந்தி 19 Jun 2023 6:45 PM GMT (Updated: 20 Jun 2023 9:15 AM GMT)

காயல்பட்டினத்தில் பிரீமியர் லீக் கால்பந்து போட்டி பரிசளிப்பு விழா நடந்தது.

தூத்துக்குடி

ஆறுமுகநேரி:

காயல்பட்டினம் வீ யூனைடெட் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் 15-வது ஆண்டு காயல் பிரிமியர் லீக் கால்பந்து போட்டிகள் வாவு வஜீஹா பெண்கள் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இறுதிப்போட்டியில் காயல்பட்டினம் சுல்தான் வாரியர்ஸ் அணியும் ,சிங்கை கிங்ஸ் அணியும் மோதின.

இந்த போட்டி சமநிலையில் முடிவுற்றதால், டைபிரேக்முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் சுல்தான் வாரியர்ஸ் அணி 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று சுழற்கோப்பையை தட்டி சென்றது. தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு காயல்பட்டினம் நகராட்சி முன்னாள் தலைவரும், வாவு வஜீஹா பெண்கள் கல்லூரி தலைவருமான ஹாஜி வாவு செய்யது அப்துர்ரஹ்மான் தலைமை தாங்கினார். இந்தியன் வங்கி கால்பந்து அணி துணை பயிற்சியாளர் ராஜராஜன், சென்ட்ரல் எக்ஸைஸ் அணி கால்பந்து வீரர் பாண்டியன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்திகழ்ச்சியில் ஹாங்காங் தமிழ் சங்க தலைவர்.எம்.ஏ. செய்யது அஹமது, வாவு வஜீஹா கல்லூரி செயலர் வாவு மொஹூதஜிம், முன்னாள் கால்பந்தாட்ட வீரர்கள் ஐ.பசீர் அஹமது, எல்.டி. சித்தீக் ஆகியோர் பங்கேற்று பரிசுகளை வழங்கினர். இந்நிகழ்ச்சியை ஆசிரியர் அஹமது மீராதம்பி தொகுத்து வழங்கினார்.


Next Story