கோத்தகிரியில் ரூ.4½ கோடியில் அரசு ஊழியர்களுக்கு குடியிருப்புகள்கட்டுமான பணிகள் தீவிரம்


கோத்தகிரியில் ரூ.4½ கோடியில் அரசு ஊழியர்களுக்கு  குடியிருப்புகள்கட்டுமான பணிகள் தீவிரம்
x

குடியிருப்புகளுக்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதை படத்தில் காணலாம். 

தினத்தந்தி 4 Aug 2023 12:15 AM IST (Updated: 4 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரியில், ரூ.4½ கோடியில் அரசு ஊழியர்களுக்கான குடியிருப்புகள் கட்டுமான பணிகள் தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நீலகிரி

கோத்தகிரி: கோத்தகிரியில், ரூ.4½ கோடியில் அரசு ஊழியர்களுக்கான குடியிருப்புகள் கட்டுமான பணிகள் தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அரசு ஊழியர்களுக்கு குடியிருப்புகள்

கோத்தகிரி பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகே கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அரசு ஊழியர்கள் குடியிருப்புகள் கட்டப்பட்டு இருந்தன. மிகவும் பழமையான இந்த குடியிருப்புகளின் மேற்கூரை ஓடுகள் மற்றும் கட்டிடங்களின் சுவர்கள் பழுதடைந்து காணப்பட்டன. அதனால் அந்த பழைய குடியிருப்புக்களை இடித்து அகற்றி விட்டு அதே பகுதியில் தலா 4 வீடுகள் கொண்ட இரண்டு கட்டிடங்களும், அதேபோல் கோத்தகிரி சக்திமலை பகுதியில் ஏற்கனவே பழுதடைந்த தாசில்தார் குடியிருப்பு கட்டிடத்தை இடித்து அகற்றி அங்கும் தலா 4 வீடுகள் கொண்ட இரண்டு கட்டிடங்கள் (தாசில்தார் குடியிருப்பு உள்பட) என மொத்தம் 16 குடியிருப்புகள் கட்ட அதிகாரிகள் முடிவு செய்தனர். இதற்காக பொதுப்பணித் துறை மூலம் ரூ.4 கோடியே 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

பணிகள் தீவிரம்

இதனைத்தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு கோத்தகிரி பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகே இருந்த பழைய குடியிருப்புகளை இடித்து அகற்றப்பட்டது. தற்போது நிலத்தில் சுமார் 10 அடி ஆழத்திற்கு மண் அகற்றப்பட்டு, அஸ்திவார கான்கிரீட் தூண்கள் அமைக்கும் பணியும், செம்மண்ணுடன் எம்.சேண்டை தண்ணீருடன் கலந்து கொட்டி தரைத்தளத்தை பலப்படுத்தும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் பொதுப்பணித்துறை என்ஜினீயர்கள் மேற்பார்வையில் நடைபெற்று வருகின்றன.


Next Story