கும்பகோணத்தில் கொலு பொம்மைகள் தயாரிக்கும் பணி தீவிரம்


கும்பகோணத்தில் கொலு பொம்மைகள் தயாரிக்கும் பணி தீவிரம்
x

கும்பகோணத்தில் கொலு பொம்மைகள் தயாரிக்கும் பணி தீவிரம்

தஞ்சாவூர்

நவராத்திரி விழாவை முன்னிட்டு கும்பகோணத்தில் கொலு பொம்மைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நவராத்திரி விழா

தமிழகத்தில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான நவராத்திரி விழா வருகிற 26-ந்தேதி தொடங்குகிறது. நவராத்திரி விழாவை முன்னிட்டு சைவ மற்றும் வைணவ கோவில்களில் கொலு அமைத்து சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம்.

விழாவை முன்னிட்டு கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் கொலுவில் வைக்கப்பட உள்ள பொம்மைகளை கைவினை கலைஞர்கள் வண்ண பேப்பர்களை வைத்து அழகுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கொலு பொம்மைகள் தயாரிக்கும் பணி

கும்பகோணம் பகுதியில் ஏராளமான கைவினை கலைஞர்கள் கொலு பொம்மைகள் தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதில் 3 இஞ்ச் அளவு முதல் பல்வேறு உயரங்களில் பிள்ளையார், வள்ளி, தெய்வானை, முருகர், லட்சுமி, சரஸ்வதி, பெருமாள், சிவன், பார்வதி, விஷ்ணுவின் தசாவதார பொம்மைகள், நடராஜர் உள்ளிட்ட கொலு பொம்மைகள் மற்றும் சமய தலைவர்கள், தேச தலைவர்களின் உருவ பொம்மைகளை தயாரித்து வர்ணம் பூசி விற்பனைக்காக வைத்துள்ளனர். கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவில் பகுதியில் உள்ள கடையில் பொதுமக்கள் கொலு பொம்மைகளை தேர்வு செய்து ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.


Next Story