தொழிலாளர் நல அலுவலகத்தில் தேசிய தரவு தளம் குறித்த விழிப்புணர்வு கூட்டம்
தேனி தொழிலாளர் நல அலுவலகத்தில், வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டல் உரிமையாளர்களுக்கு மத்திய அரசின் அமைப்புசாரா தொழிலாளர்களின் தேசிய தரவு தளம் தொடர்பாக விழிப்புணர்வு கூட்டம் நடந்தது
தேனி
தேனி தொழிலாளர் நல அலுவலகத்தில், வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டல் உரிமையாளர்களுக்கு மத்திய அரசின் அமைப்புசாரா தொழிலாளர்களின் தேசிய தரவு தளம் தொடர்பாக விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. உதவி ஆணையர் (அமலாக்கம்) சிவக்குமார் தலைமை தாங்கி பேசினார். அமைப்புசாரா தொழிலாளர்களை தேசிய தரவு தளத்தில் அதிக அளவில் பதிவு செய்வது தொடர்பாகவும், தொழிலாளர்களின் சமூக பாதுகாப்பு மற்றும் விபத்து காப்பீடு தொகை போன்றவை பெறும் நடைமுறைகள் குறித்தும், விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் வணிகர்கள், ஓட்டல் உரிமையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story