மானாமதுரை வாரச்சந்தையில் தொழிலாளர் துறையினர் அதிரடி சோதனை முத்திரையிடாத எடைகருவிகள் பறிமுதல்


மானாமதுரை வாரச்சந்தையில் தொழிலாளர் துறையினர் அதிரடி சோதனை முத்திரையிடாத எடைகருவிகள் பறிமுதல்
x
தினத்தந்தி 12 Aug 2023 12:45 AM IST (Updated: 12 Aug 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

மானாமதுரை வாரச்சந்தையில் தொழிலாளர் துறையினர் அதிரடி சோதனை நடத்தியதில் முத்திரையிடாத எடைகருவிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

சிவகங்கை


சென்னை தொழிலாளர் ஆணையர் அதுல்ஆனந்த், எடையளவு கட்டுப்பாட்டு அதிகாரி லெட்சுமிகாந்தன் ஆணைப்படியும், மதுரை கூடுதல் தொழிலாளர் ஆணையர் ஜெயபாலன், மதுரை ெதாழிலாளர் இணை ஆணையர் சுப்பிரமணியன் ஆலோசனையின் பேரில் சிவகங்கை தொழிலாளர் உதவி ஆணையர்(அமலாக்கம்) முத்து தலைமையில் தொழிலாளர் துணை ஆய்வாளர் வேலாயுதம், தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் தீனதயாளன், வசந்தி, மகாலட்சுமி ஆகியோர் மானாமதுரை வாரச்சந்தையில் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது வியாபாரிகளிடம் இருந்து முத்திரையிடப்படாத மின்னணு தராசுகள் 7, மேஜை தராசு 8, விட்டத்தராசு 10, இரும்பு எடைக்கற்கள் 34 மற்றும் தரப்படுத்தப்படாத எடையளவுகள் 6 ஆக மொத்தம் 65 எடையளவைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

முத்திரையிடாமல் எடையளவுகள் பயன்படுத்தினால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும், முத்திரையிட்டு பயன்படுத்துமாறும், மின்னணு தாரசுகள் ஆண்டுக்கு ஒருமுறையும், விட்டத்தராசுகள் மற்றும் படிக்கற்கள் 2 ஆண்டுக்கு ஒருமுறையும், அதன் சான்றிதழை உடன் வைத்திருக்குமாறும், பொட்டல பொருட்களில் பொருளின் பெயர், பொருளின் நிகர எடை, அதிகபட்ச சில்லரை விற்பனை விலை, தயாரிப்பாளர் முழு முகவரி, நுகர்வோர் புகார் தெரிவிக்க தொலைபேசி எண் ஆகிய சான்றுரைகள் இடம் பெற்றிருக்க வேண்டும். இல்லையெனில் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று சிவகங்கை தொழிலாளர் உதவி ஆணையர் வியாபாரிகளிடம் அறிவுறுத்தினார்.

இந்த தகவலை சிவகங்கை மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் முத்து தெரிவித்தார்.

1 More update

Related Tags :
Next Story