நாகையில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் அலுவலகத்திற்கு 'சீல்'


நாகையில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் அலுவலகத்திற்கு சீல்
x

நாகையில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் அலுவலகத்திற்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

நாகப்பட்டினம்

இந்தியாவில் டெல்லி, கர்நாடகா, தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில், கடந்த மாதம் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை செய்து, அதன் நிர்வாகிகளை கைது செய்தனர். இதன் அடிப்படையில், மத்திய அரசு பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பிற்கு தடை விதித்தது. அதனை தொடர்ந்து அதன் அலுவலகங்களை சீல் வைத்து பூட்டும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி நாகை வடக்கு கோட்டை வாசல் அண்ணா சிலை அருகே உள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் அலுவலகத்திற்கு, உதவி கலெக்டர் முருகேசன் தலைமையில், தாசில்தார் கார்த்திகேயன், வருவாய் ஆய்வாளர் அருண்குமார், கிராம நிர்வாக அலுவலர் அருள் ஆனந்த், வெளிப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் ஆகியோர் நேற்று வந்தனர். பின்னர் மின் இணைப்பை துண்டித்து அலுவலகத்தை பூட்டி 'சீல்'வைத்தனர். மேலும் அலுவலகத்தில் இருந்த கொடிகளை பறிமுதல் செய்தனர். நாகையில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



Next Story