நாகலாபுரத்தில்பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்


நாகலாபுரத்தில்பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 5 April 2023 6:45 PM GMT (Updated: 5 April 2023 6:46 PM GMT)

நாகலாபுரத்தில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி

எட்டயபுரம்:

நாகலாபுரம் பஸ் நிறுத்தம் அருகே பா.ஜ.க.வினர் நேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். விளாத்திகுளம் மற்றும் புதூர் வட்டார விவசாயிகளுக்கு மத்திய அரசு விடுவித்துள்ள இன்சூரன்ஸ் தொகை, வேளாண்மை துறைகளில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் பூச்சி மருந்து தெளிப்பான், மண்வெட்டி, கடப்பாரை உள்ளிட்ட உபகரணங்கள் அனைத்து விவசாயிகளுக்கும் கிடைக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்பாட்டத்திற்கு விவசாய அணி மண்டல தலைவர் சங்கரலிங்க பாண்டியன் தலைமை தாங்கினார். ஆர்பாட்டத்தில் பா.ஜ.க.வினர் திரளாக கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.


Next Story