நம்பியூாில்வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை


நம்பியூாில்வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
x

நம்பியூாில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

ஈரோடு

ஈரோடு மாவட்டம் நம்பியூர் காந்திபுரம் மேட்டை சேர்ந்தவர் வேலாயுதம் இவருடைய மனைவி வச்சலா (58). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரள மாநிலம் பாலக்காட்டுக்கு ஜோதிடம் பார்க்க சென்றார்.

அப்போது அங்கு அவருக்கு குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தை சேர்ந்த ஜெகன் (26) என்ற வாலிபர் அறிமுகமானார். தனக்கு யாரும் இல்லை என்றும், வேலை தேடிக்கொண்டு இருப்பதாகவும் வச்சலாவிடம் கூறினார்.

இந்தநிலையில் கடந்த 28-ந் தேதி வேலை தேடி நம்பியூருக்கு ஜெகன் வந்துள்ளார். அப்போது வச்சலா வீட்டுக்கு சென்றார். அவரை வீட்டில் தங்கவைத்துவிட்டு, வச்சலா கூலி வேைலக்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. மதியம் அவர் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டுக்குள் வீட்டின் விட்டத்தில் சேலையால் தூக்குப்போட்டு ஜெகன் பிணமாக தொங்கினார்.

அதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த வச்சலா இதுகுறித்து நம்பியூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பாிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து, ஜெகனின் செல்போனை கைப்பற்றி, அவர் ஏன் தற்கொலை செய்துகொண்டார்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story