நாசரேத்தில் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்


நாசரேத்தில்  மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
x
தினத்தந்தி 8 Sep 2022 2:13 PM GMT (Updated: 8 Sep 2022 2:14 PM GMT)

நாசரேத்தில் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

தூத்துக்குடி

நாசரேத்:

நாசரேத் - மணிநகர் பெருமாள்சாமி மாரியம்மன் கோவில் கும்பாபிஷே விழா யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து அனுக்ஞை, கணபதி பூஜை, மஹா சங்கல்பம், ததிவார்ச்சனை, தத்வஹோமம், மூல மந்த்ரஹோமம், பூர்ணாகுதி, ஸபர்சாகுதி, யாத்ராதானம், கும்பம் புறப்பாடு நடந்தது. பின்னர் விநாயகர், பெருமாள்சாமி, மாரியம்மன் விமான கும்பாபிஷேகம், மூலஸ்தான அம்மன் கும்பாபிஷேகம் நடந்தேறியது. இதை தொடர்ந்து அம்மனுக்கு அலங்காரம், தீபாராதனை மற்றும் அன்னதானம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இரவில் திரு விளக்கு பூஜை நடைபெற்றது.


Next Story