நெகமம் பகுதியில் தோட்டங்களில் இருப்பில் இருந்த தேங்காய்கள் முளைத்தன-விவசாயிகள் வேதனை


நெகமம் பகுதியில் தோட்டங்களில் இருப்பில் இருந்த தேங்காய்கள் முளைத்தன-விவசாயிகள் வேதனை
x
தினத்தந்தி 5 Jan 2023 12:15 AM IST (Updated: 5 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

நெகமம் பகுதியில் தோட்டங்களில் இருப்பு வைக்கப்பட்ட தேங்காய்கள் முளைத்தன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்தார்கள்.

கோயம்புத்தூர்

நெகமம்

நெகமம் பகுதியில் தோட்டங்களில் இருப்பு வைக்கப்பட்ட தேங்காய்கள் முளைத்தன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்தார்கள்.

தேங்காய்

நெகமம் பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தென்னையில் இருந்து தேங்காய், கொப்பரை, மஞ்ச நார் உள்பட பல்வேறு பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு தேங்காய் ரூ.9 வரை விற்பனை ஆனது. மேலும் ஆட்கள் பற்றாக்குறை காரணமாக விவசாயிகள் கடும் சிரமம் அடைந்து வந்தனர். ஓரளவு விலை கிடைத்ததால் விவசாயிகள் சமாளித்தனர்.

நெகமம், கிணத்துக்கடவு, சுல்தான்பேட்டை, வடசித்தூர், காட்டம்பட்டி, எம்மேகவுண்டன்பாளையம், ஆண்டிபாளையம், செட்டியக்காபாளையம், சின்னநெகமம், ஆவலப்பம்பட்டி, தேவணாம்பாளையம், மற்றும் பல்வேறு இடங்களில் தேங்காய்களை உரிக்காமல் அப்படியே போட்டு உள்ளனர். ஒவ்வொரு தென்னந்தோப்புகளிலும் 30 ஆயிரம் முதல், 70 ஆயிரம் வரை தேங்காய்கள் உரிக்காமல் அப்படியே தேக்கி வைத்துள்ளனர்.

ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய்

இதனால் மலைபோல் தேங்காய்கள் குவிந்துள்ளன. மேலும் தேங்காய்கள் முளைத்து வீணாகி உள்ளது. அதனால் விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளார்கள். இதன் காரணமாக வெளிமார்க்கெட்டில் தேங்காய் விலை அதிகரித்து வருகிறது. இது குறித்து தென்னை விவசாயிகள் கூறியதாவது;-

பொள்ளாச்சி தாலுகா பகுதியில் தென்னை சாகுபடி பாதிப்படைந்து வருகிறது.

விலை உயரும் என்ற நம்பிக்கையுடன் தேங்காய்களை உரிக்காமல் தோப்புகளில் அப்படியே வைத்துள்ளோம். தேங்காய் விலை வீழ்ச்சிக்கு காரணம் வெளிநாடுகளில் இருந்து பாமாயில் இறக்குமதி செய்வதுதான். தேங்காய் எண்ணெய்க்கு பதில் பாமாயில் பயன்படுத்துவதால்தான் தேங்காய் விலை குறைந்து வருகிறது. எனவே ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்தால் தான் தேங்காய் விலை உயர வாய்ப்புகள் உள்ளன.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story