பழனியில், பைபாஸ் சாலையோர குப்பைகள் அகற்றம்


பழனியில், பைபாஸ் சாலையோர குப்பைகள் அகற்றம்
x

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக பழனியில், பைபாஸ் சாலையோர குப்பைகள் அகற்றப்பட்டன.

திண்டுக்கல்

பழனி நகரில் வாகன நெரிசலை தடுக்கும் வகையில், புறநகர் பகுதியான சிவகிரிப்பட்டியில் இருந்து சண்முகநதி வரை பைபாஸ் சாலை உள்ளது. இந்த சாலை வழியாக திண்டுக்கல், மதுரையில் இருந்து உடுமலை, பொள்ளாச்சி, கேரளாவுக்கு வாகனங்கள் செல்கின்றன. இந்நிலையில் பழனியில் உள்ள பைபாஸ் சாலையோரத்தில் இறைச்சி கழிவுகள், ஓட்டல் கழிவுகள் என பல்வேறு குப்பைகள் கொட்டப்பட்டு இருந்தது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.

இந்நிலையில் பழனி பைபாஸ் சாலையோரத்தில் உள்ள கழிவுகளை அகற்ற வேண்டும், கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும் என நேற்று முன்தினம் 'தினத்தந்தி'யில் செய்தி பிரசுரிக்கப்பட்டது. இதன் எதிரொலியாக, வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜசேகர் தலைமையிலான அதிகாரிகள் சிவகிரிப்பட்டி, இடும்பன்குளம் பகுதியில் உள்ள குப்பைகளை எந்திரம் மூலம் நேற்று அகற்றினர்.

இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜசேகர் கூறும்போது, முதற்கட்டமாக பழனி பைபாஸ் சாலையோரம் கொட்டப்பட்டு இருந்த குப்பைகள் அகற்றப்பட்டு உள்ளது. இனி வரும் நாட்களில் அங்கு குப்பைகள் கொட்டப்படுவது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


Next Story