பெரம்பலூரில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.8.22 குறைந்தது


பெரம்பலூரில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.8.22 குறைந்தது
x

மத்திய அரசு கலால் வரியை குறைத்ததால் பெரம்பலூரில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.8.22 குறைந்தது. டீசல் லிட்டர் ரூ.95.13-க்கு விற்பனையானது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 11-ந்தேதி பெட்ரோல் லிட்டர் 111 ரூபாய் 72 காசுக்கும், டீசல் லிட்டர் 101 ரூபாய் 83 காசுக்கும், ஸ்பீடு பெட்ரோல் லிட்டர் 114 ரூபாய் 18 காசுக்கும் விற்பனையானது. அதனை தொடர்ந்து கடந்த 41 நாட்களாக விலை ஏதும் மாற்றம் இல்லாமல் மேற்கண்ட விலைக்கு பெட்ரோல்-டீசல் விற்பனையானது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மத்திய அரசு திடீரென்று பெட்ரோல்-டீசல் மீதான கலால் வரியை குறைத்தது. இதனால் பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று பெட்ரோல் லிட்டருக்கு 8 ரூபாய் 22 காசு குறைந்து, 103 ரூபாய் 50 காசுக்கும், டீசல் லிட்டருக்கு 6 ரூபாய் 70 காசு குறைந்து, 95 ரூபாய் 13 காசுக்கும், ஸ்பீடு பெட்ரோலும் லிட்டருக்கு 8 ரூபாய் 22 காசு குறைந்து, 105 ரூபாய் 96 காசுக்கும் விற்பனையானது. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்தனர்.


Next Story