பெரியகுளத்தில்தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டி


பெரியகுளத்தில்தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டி
x
தினத்தந்தி 15 May 2023 6:45 PM GMT (Updated: 15 May 2023 6:46 PM GMT)

பெரியகுளத்தில் தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டி நடந்தது.

தேனி

தனியார் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில், தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டி பெரியகுளத்தில் நேற்று மாலை தொடங்கியது. இந்த போட்டியில் கவுஹாத்தி ஓ.என்.ஜி.சி. அணி, புனே கஸ்டம்ஸ் அணி, கொச்சி மத்திய ஜி.எஸ்.டி. மற்றும் கஸ்டம்ஸ் அணி, புதுடெல்லி இந்திய விமானப்படை அணி, சென்னை விளையாட்டு விடுதி அணி, தமிழ்நாடு சிறப்பு போலீஸ் துறை அணி, புதுடெல்லி இந்திய ரெயில்வே அணி, திருவனந்தபுரம் கேரளா போலீஸ் அணி, புதுடெல்லி சி.ஆர்.பி.எப். அணி உள்ளிட்ட 21 அணிகள் பங்கேற்று விளையாடுகின்றன.

போட்டிகள் நாக் அவுட் மற்றும் லீக் சுற்று முறையில் இந்த போட்டிகள் நடைபெறுகிறது. நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் பெரியகுளம் சில்வர் ஜூப்லி விளையாட்டு கழக அணியும், உடுமலைப்பேட்டை கூடைப்பந்து அகாடமி அணியும் மோதின. இதில் பெரியகுளம் அணி 67-49 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. இதையடுத்து நடைபெற்ற மற்றொரு போட்டியில் நெல்லை பி.ஏ.கே.கே.கூடைப்பந்து அகாடமி அணியும், போடி கூடைப்பந்து கழக அணியும் விளையாடின. இதில் போடி அணி 76-58 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.


Next Story