பொள்ளாச்சியில் உரிமம் இல்லாமல் இயங்கிய 2 ஆம்புலன்ஸ்கள் பறிமுதல்- போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை


பொள்ளாச்சியில் உரிமம் இல்லாமல் இயங்கிய 2 ஆம்புலன்ஸ்கள் பறிமுதல்-  போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 16 Dec 2022 12:15 AM IST (Updated: 16 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சியில் அரசு வாகனத்தை ஏலத்தில் எடுத்து உரிமம் பெறாமல், பெயரை மாற்றாமல் இயங்கிய 2 ஆம்புலன்ஸ்கள் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் சோதனையில் சிக்கியது.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சியில் அரசு வாகனத்தை ஏலத்தில் எடுத்து உரிமம் பெறாமல், பெயரை மாற்றாமல் இயங்கிய 2 ஆம்புலன்ஸ்கள் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் சோதனையில் சிக்கியது.

ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஆய்வு

பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரி முன் தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இதனால் பல்வேறு இடையூறுகள் ஏற்படுவதாக வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு புகார் வந்தது. இதை தொடர்ந்து பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலர் முருகானந்தம் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கோகுலகிருஷ்ணன், செல்வி ஆகியோர் ஆம்புலன்ஸ் வாகனங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது உரிமம் பெறாமல் இயங்கி 2 ஆம்புலன்ஸ் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விதிமுறைகளை மீறி வாகனங்களின் முகப்பு பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த பம்பர் அகற்றப்பட்டது. இதற்கிடையில் அரசு வாகனத்தை ஏலத்தில் எடுத்து பெயரை மாற்றாமல் இயங்கிய ஒரு வாகனமும் ஆய்வில் சிக்கியது. இதுகுறித்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கூறியதாவது:-

அபராதம்

அரசு ஆஸ்பத்திரி முன் நிறுத்தப்பட்டு இருக்கும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது ஏலத்தில் எடுக்கப்பட்ட அரசு வாகனத்தின் பெயரை கூட மாற்றாமல் அப்படியே இயக்கி உள்ளனர். மேலும் அந்த வாகனத்தில் உரிய வசதிகள் செய்து ஆம்புலன்சாக மாற்றுவதற்கு உரிய உரிமம் பெறவில்லை. இதேபோன்று மற்றொரு வாகனமும் தனியார் ஒருவரிடம் வாங்கி உரிமம் பெறாமல் இயங்கி வந்தது தெரியவந்தது.

2 ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கும் ரூ.32 அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் விதிமுறையை மீறி வாகனங்களில் பொருத்தப்பட்டு இருந்த பம்பர் அகற்றப்பட்டது. ஆம்புலன்ஸ் வாகனங்களின் பணி மிக முக்கியமானதாகும். எனவே முறையாக உரிமம் பெற்று, சம்பந்தப்பட்ட உரிமையாளர் பெயரில் வாகனங்கள் இருக்க வேண்டும். தேவையில்லாமல் சைரன் ஒலித்துக் கொண்டு வேகமாக செல்ல கூடாது. இதேபோன்று தொடர்ந்து நகர்புறங்கள் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள ஆம்புலன்ஸ் வாகனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story