தனியார் துறை வங்கிகளில் தேசிய அளவில் சிறந்த வங்கியாக தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி தேர்வு


தனியார் துறை வங்கிகளில் தேசிய அளவில் சிறந்த வங்கியாக தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி தேர்வு
x
தினத்தந்தி 1 Feb 2023 12:15 AM IST (Updated: 1 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தனியார் துறை வங்கிகளில் பெரிய வங்கிகள் அல்லாத பிரிவில், தேசிய அளவில் சிறந்த வங்கியாக தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது.

தூத்துக்குடி

தனியார் துறை வங்கிகளில் பெரிய வங்கிகள் அல்லாத பிரிவில், தேசிய அளவில் சிறந்த வங்கியாக தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது.

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி லிமிடெட் பழைய தனியார் துறை வங்கி ஆகும். இந்த வங்கி தொடர்ந்து லாபம் ஈட்டி வருகிறது. இந்தியா முழுவதும் 16 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் 511 கிளைகள், 12 மண்டல அலுவலகங்கள் மூலம் சுமார் 50 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு சேவையாற்றி வருகிறது. இந்த வங்கி தேசிய அளவில் சிறந்த வங்கி என்ற விருதை பெற்று உள்ளது. கேரளா மாநில வங்கி சங்கங்களின் மன்றம் வங்கிகளின் திறமையான செயல்பாடுகளின் அடிப்படையில் சிறந்த வங்கியை தேர்வு செய்து விருது வழங்கி வருகிறது. அதன்படி தனியார் துறை வங்கிகளில் பெரிய வங்கிகள் அல்லாத வங்கிகள் பிரிவில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி சிறந்த வங்கியாக தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

விருது

இந்த விருது வழங்கும் விழா எர்ணாகுளத்தில் நடந்தது. விழாவில் முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் விருதை வழங்க, தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் பொதுமேலாளர் (செயல்பாடுகள் மற்றும் சேவைகள் துறை) சூரியராஜ் பெற்றுக் கொண்டார்.

இது குறித்து வங்கியின் நிர்வாக இயக்குனர் எஸ்.கிருஷ்ணன் கூறும் போது, விருது பெற்ற மகிழ்ச்சியை வங்கியின் அனைத்து உடமைதாரர்களுக்கும் பகிர்வதாகவும், விருதுகள் எங்களது வங்கியின் அனைவரும் இன்னும் சிறப்பாக செயல்பட்டு வளர்ச்சியடைய ஊக்கம் அளிக்கிறது என்று கூறினார்.


Next Story