சேலத்தில் மோதுவது போல் வந்த தனியார் பஸ்சை எட்டி உதைத்த பெண்ணால் பரபரப்பு


சேலத்தில் மோதுவது போல் வந்த தனியார் பஸ்சை எட்டி உதைத்த பெண்ணால் பரபரப்பு
x

சேலத்தில் மோதுவது போல் வந்த தனியார் பஸ்சை எட்டி உதைத்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம்

ஓமலூர் செம்மாண்டப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவர் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவத்தன்று அவர் தனது மனைவி ஜமுனா மற்றும் மகனுடன் சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். இதையடுத்து அவர்கள் உதவித்தொகை கேட்டு அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர்.

பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் அருகே உள்ள ரோட்டை கடக்க முயன்றனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த தனியார் பஸ் கோவிந்தராஜ் குடும்பத்தினர் மீது மோதுவது போல் வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் ஆத்திரமடைந்த ஜமுனா பஸ்சை எட்டி உதைத்தார். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதையடுத்து கலெக்டர் அலுவலகம் அருகே நின்றிருந்த போக்குவரத்து போலீசார் அங்கு விரைந்து வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் சமாதானம் அடைந்த அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Next Story