சவுதி அரேபியாவில் விபத்தில் இறந்த தொழிலாளியின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை கலெக்டரிடம் மனைவி மனு
சவுதி அரேபியாவில் விபத்தில் இறந்த தொழிலாளியின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டரிடம் அவருடைய மனைவி மனு கொடுத்துள்ளாா்.
கள்ளக்குறிச்சி
சங்கராபுரம் தாலுகா இளையனார்குப்பம் கிராமத்தை சேர்ந்த ராமச்சந்திரன் மனைவி பரமேஸ்வரி, மகன் பெரியசாமி மற்றும் குடும்பத்தினருடன் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமாரிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
எனது கணவர் ராமச்சந்திரன்(வயது 47), கடந்த 2019-ம் ஆண்டு சவுதி அரேபியா நாட்டிற்கு சென்று கூலி வேலை செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த 1-ந்தேதி மதியம் 2 மணிக்கு ராமச்சந்திரன் கட்டிட வேலை செய்து கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டு இறந்து விட்டதாக சவுதி அரேபியாவில் இருந்து தகவல் கிடைத்துள்ளது. எனவே எனது கணவர் உடலை சொந்த ஊரான இளையனார்குப்பத்திற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
Related Tags :
Next Story