தாளவாடி மலைப்பகுதியில் மாவட்ட வருவாய் அதிகாரி ஆய்வு


தாளவாடி மலைப்பகுதியில்   மாவட்ட வருவாய் அதிகாரி ஆய்வு
x
தினத்தந்தி 16 Dec 2022 7:30 PM GMT (Updated: 16 Dec 2022 7:30 PM GMT)

அதிகாரி ஆய்வு

ஈரோடு

மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினி சந்திரா தாளவாடி அடுத்த தொட்டாபுரம் ரேஷன் கடை மற்றும் தானியங்கி மழைமானி அமைக்கும் இடத்தையும் பி.எஸ்.என்.எல். செல்போன் கோபுரம் அமைக்கும் இடத்தையும், சிக்கள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கபள்ளியிலும் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் தாளவாடி தாசில்தார் அலுவலகத்தில் உள்ள இ-சேவை மற்றும் ஆதார் மையங்களிலும், அலுவலகத்தில் உள்ள பதிவேடுகளையும் பார்வையிட்டார். அப்போது தாளவாடி தாசில்தார் உமாமகேஷ்வரன், வட்டார துணை ஆய்வாளர் விஜயராஜன், கண்ணபிரான், நிலவருவாய் ஆய்வாளர் பெரியசாமி மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் உடன் இருந்தனர்


Next Story