தமிழ்நாட்டில் இன்று 15 இடங்களில் வெயில் 'சதம்' அடித்தது
தமிழ்நாட்டில் இன்று 15 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெயில் பதிவாகியுள்ளது.
சென்னை,
தென்மேற்கு பருவமழைத் தொடங்கிய பிறகு தான், தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் சற்று குறையத் தொடங்கும். அதுவரையில் வாட்டி வதைக்கும் வெப்பத்தில் இருந்து தப்பிக்க வாய்ப்பு இல்லை. அக்னி நட்சத்திரம் முடிந்த பிறகுதான் வெயிலின் கொடுமை நாளுக்கு நாள் தமிழ்நாட்டில் அதிகரித்து வருகிறது.
அந்த வகையில் தமிழ்நாட்டில் இன்று 15 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெயில் பதிவாகியுள்ளது. அதன்படி திருத்தணி, கரூர் பரமத்தியில் 104 டிகிரி ஃபாரன்ஹீட்டும், பாளையங்கோட்டை, திருச்சி, வேலூரில் 103 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பமும் பதிவாகியுள்ளது.
Related Tags :
Next Story