தஞ்சை காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்
தஞ்சையில், காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர்
தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் எஸ்.சி.பிரிவு சார்பில் ஆர்ப்பாட்டம் தஞ்சை ரெயில் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்.சி.பிரிவு மாவட்ட தலைவர் பொன்.நல்லதம்பி தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்டத் தலைவர் நாஞ்சி.கி.வரதராஜன், மாநகரத்தலைவர் பி.ஜி.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார தலைவர் அக்கரைசெல்வம் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் ராகுல்காந்தியின் எம்.பி. பதவியை தகுதி நீக்கம் செய்த மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் திருவோனம் வட்டாரத் தலைவர் ரங்கசாமி, மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் ஜேம்ஸ், விவசாய அணி தங்கராசு, சேவாதளம் திருஞானம் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் திருவோணம் வட்டார செயலாளர் மதியழகன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story