ஆண்டிப்பட்டியில் 1 மணி நேரம் சிலம்பம் சுற்றி பள்ளி மாணவர்கள் சாதனை


ஆண்டிப்பட்டியில்  1 மணி நேரம் சிலம்பம் சுற்றி பள்ளி மாணவர்கள் சாதனை
x

ஆண்டிப்பட்டியில் 1 மணி நேரம் சிலம்பம் சுற்றி பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர்

தேனி

ஆண்டிப்பட்டியில் தனியார் விளையாட்டு கழகம் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகள் 1 மணி நேரம் சிலம்பம் சுற்றும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சி ஆண்டிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடந்தது. இதில் தேனி, கம்பம், ஆண்டிப்பட்டி, போடி, பெரியகுளம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 100 பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியை ஆண்டிப்பட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு ராமலிங்கம் தொடங்கி வைத்தார். இதனை பதிவு செய்ய ஆசியன் உலக சாதனை அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் வந்திருந்தனர். அவர்கள் முன்னிலையில் 100 மாணவ-மாணவிகள் தொடர்ந்து ஒரு மணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனை படைத்தனர். முடிவில் சிலம்பம் சுற்றிய மாணவ-மாணவிகளுக்கு ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ. மகாராஜன் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.


Next Story