ஆண்டிப்பட்டியில் கண்மாய்களில் நீர் நிரப்பக்கோரி விவசாயிகள் ஊர்வலம்


ஆண்டிப்பட்டியில்  கண்மாய்களில் நீர் நிரப்பக்கோரி விவசாயிகள் ஊர்வலம்
x

ஆண்டிப்பட்டியில் உள்ள கண்மாய்களில் தண்ணீர் நிரப்பக்கோரி விவசாயிகள் ஊர்வலம் நடத்தினர்

தேனி

ஆண்டிப்பட்டி ஒன்றியத்தில் உள்ள கண்மாய், குளம், ஊருணிகளில் கடந்த சில ஆண்டுகளாக தண்ணீர் நிரம்பாததால் விவசாயம் கேள்விக்குறியாகி உள்ளது. இதனால் விவசாயிகள் சிரமப்பட்டு வருகின்றனர். ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணை இந்த மாதம் 2 முறை நிரம்பி, தண்ணீர் திறந்து எந்த பலனும் இல்லை. இதனால் முல்லைப்பெரியாற்றில் இருந்து குழாய்கள் மூலம் இந்த பகுதிக்கு தண்ணீர் கொண்டு வந்து அனைத்து கண்மாய்களிலும் நிரப்ப வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும் பல கட்ட போராட்டங்கள் நடத்தியும் கோரிக்ைக நிறைவேற்றப்படவில்லை.

இந்நிலையில் இன்று இதே கோரிக்கையை வலியுறுத்தி ஆண்டிப்பட்டி அனைத்து விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் ஊர்வலம் நடந்தது. ஆண்டிப்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு ெதாடங்கிய ஊர்வலத்திற்கு கூட்டமைப்பு தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார். செயலாளர் தயாளன், பொருளாளர் ரகுநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊர்வலத்தை போடிதாசன்பட்டி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் வெங்கடேசன் தொடங்கி வைத்தார்.

ஊர்வலம் ஆண்டிப்பட்டி தேசிய நெடுஞ்சாலை வழியாக வந்து சட்டமன்ற அலுவலகத்தில் முடிவடைந்தது. பின்னர் விவசாயிகள் அலுவலகத்தில் இருந்த எம்.எல்.ஏ. மகாராஜனிடம் கோரிக்கை தொடர்பாக மனு கொடுத்தனர். இதையடுத்து கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என எம்.எல்.ஏ. உறுதியளித்தார். பின்னர் ஊர்வலத்தை நிறைவு செய்து விவசாயிகள் கலைந்து சென்றனர்.


Next Story