ஆண்டிப்பட்டியில்மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா :கொடியேற்றத்துடன் தொடங்கியது


ஆண்டிப்பட்டியில்மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா :கொடியேற்றத்துடன் தொடங்கியது
x
தினத்தந்தி 24 April 2023 12:15 AM IST (Updated: 24 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon
தேனி

ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தங்கமுலாம் பூசப்பட்ட கொடிமரம் அருகே பஞ்சமூர்த்திகள் அழைத்து வரப்பட்டு பல்வேறு பூஜைகள் கொடி மரத்திற்கு செய்யப்பட்டது. பின்னர் உற்சவ பல்லக்கு ஊர்வலத்துடன் வலம் வந்து சிவாச்சாரியர்கள் வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றம் நடந்தது. இதில் ஆண்டிப்பட்டி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

திருவிழாவையொட்டி தினந்தோறும் மீனாட்சியும், சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடன் கோவில் வளாக வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளனர். விழாவில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சமூகத்தினர் சார்பில் கோவில் நிகழ்ச்சிகள் மற்றும் மண்டகப்படி நடைபெறும். இந்த நிகழ்ச்சியில் அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் ஆண்டிப்பட்டி நகர முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

1 More update

Related Tags :
Next Story