671 இடங்களில் நடந்த முகாம்களில் 35,365 பேருக்கு கொரோனா தடுப்பூசி
தேனி மாவட்டத்தில் 34-வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம்கள் 671 இடங்களில் நடந்தது
தேனி
தேனி மாவட்டத்தில் 34-வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம்கள் 671 இடங்களில் நடந்தது. இந்த முகாம்களில் மூலம் ஒரே நாளில் முதல் தவணை தடுப்பூசி 267 பேருக்கும், 2-வது தவணை தடுப்பூசி 16 ஆயிரத்து 526 பேருக்கும், பூஸ்டர் டோஸ் 18 ஆயிரத்து 572 பேருக்கும் என மொத்தம் 35 ஆயிரத்து 365 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 17 லட்சத்து 45 ஆயிரத்து 970 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தேனி அல்லிநகரம், போடி நகராட்சி பகுதிகளில் கொரோனா தடுப்பூசி முகாம்களை மாவட்ட கலெக்டர் முரளிதரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது சுகாதாரத்துறை, நகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story