போடியில் கருணாநிதி பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
போடியில் கருணாநிதி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது
போடியில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி நகரின் 33 வார்டுகளில் தி.மு.க. கொடி ஏற்றப்பட்டு கருணாநிதியின் படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டு இனிப்பு வழங்கப்பட்டது. இதில் தேவர் சிலை அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவப்படத்திற்கு தேனி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் தங்கதமிழ்செல்வன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். விழாவில் 23-வது பகுதி கழக செயலாளர் ரவிச்சந்திரன், நகர்மன்ற உறுப்பினர்கள் சங்கர், முருகேசன், ராஜா, மகேஸ்வரன், மற்றும் முன்னாள் நகர செயலாளர்கள் ரமேஷ், முகமது பசீர், தேனி மாவட்ட விவசாயிகள் அணி தலைவர் சுப்பிரமணி, முன்னாள் மாவட்ட பிரதிநிதி சங்கரபாண்டியன், நகர துணை செயலாளர் பாலு ஆகியோர் உள்பட தி.மு.க. பிரமுகர்கள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
கருணாநிதி பிறந்தநாளையொட்டி 10-வது வார்டு நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் அரசு பணி பெற, இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சிக்கு தங்கதமிழ்செல்வன் தலைமை தாங்கினார். நகர்மன்ற தலைவர் ராஜராஜேஸ்வரி பயிற்சி வகுப்புகளை தொடங்கி வைத்தார் தலைமை செயற்குழு உறுப்பினரும் நகர்மன்ற உறுப்பினருமான எம்.சங்கர் ராஜா ஆகியோர் நன்றி கூறினார். பயிற்சி வகுப்பில் ஆசிரியர்கள், மாண-மாணவிகள் கலந்து கொண்டனர். மேலும் போடி நகராட்சியின் சார்பில் 1,000 மரக்கன்றுகள் நகர் பகுதியில் நடப்பட்டது. இதில் தங்கதமிழ்செல்வன், நகர்மன்ற தலைவர் ராஜராஜேஸ்வரி சங்கர் ஆகியோர் மரக்கன்றை நட்டு வைத்தனர்.