மாவட்டத்தில் அனைத்து விவசாயிகளுக்கும் தட்டுப்பாடின்றி யூரியா உரம் கிடைக்க நடவடிக்கைகலெக்டர் ராஜகோபால் சுன்கராவிடம் மனு


மாவட்டத்தில் அனைத்து விவசாயிகளுக்கும் தட்டுப்பாடின்றி யூரியா உரம் கிடைக்க நடவடிக்கைகலெக்டர் ராஜகோபால் சுன்கராவிடம் மனு
x

மாவட்டத்தில் அனைத்து விவசாயிகளுக்கும் தட்டுப்பாடின்றி யூரியா உரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் ராஜகோபால் சுன்கராவிடம் மனு அளித்தனா்.

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் அனைத்து விவசாயிகளுக்கும் தட்டுப்பாடின்றி யூரியா உரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் ராஜகோபால் சுன்கராவிடம் மனு கொடுக்கப்பட்டது.

யூரியா தட்டுப்பாடு

ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு சிறு மற்றும் குறு விவசாயிகள் சங்க மாநில தலைவர் சுதந்திரராசு மற்றும் விவசாயிகள் நேற்று கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்ததாவது:-

ஈரோடு மாவட்டத்தில் தற்போது அனைத்து பாசன பகுதிகளிலும் நாற்று விடும் பணியும், நடவு பணியும் நடந்து வருகிறது. இந்த சூழலில் யூரியா உரம் அனைத்து தரப்பு விவசாயிகளுக்கும் தேவைப்படுகிறது. கரும்புக்கும், தீவன பயிர் வளர்ச்சிக்கும் யூரியா கட்டாயம் தேவை. ஆனால் ஈரோடு மாவட்டத்தில் பெரும்பாலான தனியார் உரக்கடைகள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் என எங்கும் யூரியா தட்டுப்பாடாக உள்ளது.

நடவடிக்கை

50 கிலோ எடையுள்ள யூரியா மூட்டை ஒன்றின் விலை ரூ.266 ஆகும். பல்வேறு கடைகளில் 3 மூட்டை யூரியா வாங்கினால், ஒரு மூட்டை கலப்பு உரம் அல்லது தேவையற்ற உரங்களை வாங்க கட்டாயப்படுத்துகின்றனர். ஒரு மூட்டை கலப்பு உரம் மற்றும் பிற உரங்கள் ரூ.1,000 வரையிலான விலை கொடுத்து வாங்க வேண்டி உள்ளது. கடைக்காரர்களிடம் கேட்டால், 'நாங்கள் 1 டன் யூரியா உரம் வாங்க 3 டன் கலப்படம் வாங்க வேண்டி உள்ளது. அதனால் கட்டாயப்படுத்தி பிற உரங்களை விற்பனை செய்கிறோம்' என்கின்றனர்.

இதுகுறித்து வேளாண் துறை அதிகாரிகளிடம் கூறினால், அவ்வாறு தட்டுப்பாடு இல்லை என்றும், பிற உரங்களை வாங்கக்கோரி விவசாயிகளை கட்டாயப்படுத்தக்கூடாது என்று கடைக்காரர்களிடம் கூறி உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் நேரடியாக ஆய்வு செய்து, அனைத்து விவசாயிகளுக்கும் தட்டுப்பாடின்றி யூரியா உரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி உள்ளனர்.


Related Tags :
Next Story