அரசூரில் இந்திய குடியரசு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


அரசூரில்  இந்திய குடியரசு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

அரசூரில் இந்திய குடியரசு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

விழுப்புரம்

திருவெண்ணெய்நல்லூர்,

திருவெண்ணெய்நல்லூர் வட்டம் அரசூர் கூட்டு ரோட்டில் மேம்பாலம் அமைக்க வேண்டும், அரசூரில் போலீஸ் நிலையம் அமைக்க வேண்டும், அரசூர் பயணியர் விடுதியை சீரமைத்து நூலகம் அமைத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய குடியரசு கட்சி சார்பில் அரசூர் கூட்டு ரோட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு விழுப்புரம் தெற்கு மாவட்ட தலைவர் அ.குமார் தலைமை தாங்கி கண்டன உரையாற்றினார். மாவட்ட செயலாளர் செல்லா, மாவட்ட பொருளாளர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில இணை பொது செயலாளர் மங்காபிள்ளை, மாநில பொருளாளர் கவுரிசங்கர் ஆகியோர் விளக்க உரை ஆற்றினார்கள். இதில் மாவட்ட துணை தலைவர் சக்கரவர்த்தி, ஒன்றிய தலைவர் ஜனார்த்தனன், ஒன்றிய செயலாளர் ராஜேஷ், ஒன்றிய மாணவரணி செயலாளர் கார்த்திக் பாலன், ஒன்றிய பொருளாளர் குமார் மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, நிர்வாகிகள் கலந்துகொண்டு கோாிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். முடிவில் விழுப்புரம் நகர தலைவர் சிலம்பரசன் நன்றி கூறினார்.


Next Story