"திராவிட இயக்க வரலாற்றில் இந்த நாள் குறிக்கப்படுவது மட்டுமல்ல பொறிக்கப்படும்" - கவிஞர் வைரமுத்து
திராவிட இயக்க வரலாற்றில் இந்த நாள் குறிக்கப்படுவது மட்டுமல்ல பொறிக்கப்படும் என கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.
சென்னை,
கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் குறித்து கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது;
"பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளில் பிறந்த மண்ணில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் தாய்க்குலத்தின் சுதந்திரத்திற்கும் சுயமரியாதைக்கும் பக்கபலமிருந்து தக்கபயன் நல்குவதாகும்.
திராவிட இயக்க வரலாற்றில் இந்த நாள் குறிக்கப்படுவது மட்டுமல்ல பொறிக்கப்படும். இந்தியாவின் பிற மாநிலங்களும் தளபதி ஏற்றி வைக்கும் இந்தத் திருவிளக்கில் தீபமேற்றிக் கொள்ளலாம்." இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story