புதுமைப்பெண் திட்டத்தில் மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம்


புதுமைப்பெண் திட்டத்தில்   மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம்
x

மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் புதுமைப்பெண்திட்டத்தை அமைச்சர் காந்தி தொடங்கிவைத்தார்.

ராணிப்பேட்டை

மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் புதுமைப்பெண்திட்டத்தை அமைச்சர் காந்தி தொடங்கிவைத்தார்.

புதுமைப் பெண் திட்ட தொடக்கவிழா

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து, தற்போது உயர் கல்வி பிடிக்கும் 1,368 மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கும் புதுமைப் பெண் திட்ட தொடக்க விழா வாலாஜா அரசு கலைக்கல்லூரில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். ஆற்காடு ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி வாழ்த்துரை வழங்கினர். மாவட்ட சமூக நல அலுவலர் இந்திரா வரவேற்றார்.

அமைச்சர் காந்தி

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு புதுமைப்பெண் திட்டத்தினை தொடங்கி வைத்து மாணவிகளுக்கு வங்கி ஏ.டி.எம். கார்டு மற்றும் வாழ்க்கை வழிகாட்டி புத்தகப் பைகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியில் ஒன்றியக் குழு தலைவர்கள் வெங்கடரமணன், அனிதா குப்புசாமி, வடிவேலு, நகர மன்ற தலைவர்கள் சுஜாதா வினோத், ஹரிணி தில்லை, முகமது அமீன், தேவி பென்ஸ் பாண்டியன், தமிழ்செல்வி அசோகன், பேரூராட்சி தலைவர்கள் மாலா இளஞ்செழியன், லட்சுமி நரசிம்மன், வருவாய் கோட்டாட்சியர் பூங்கொடி, முன்னோடி வங்கி மேலாளர் ஆலியம்மா அப்ரஹாம், தாசில்தார் ஆனந்தன் உள்பட்ட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) பூங்குழலி நன்றி கூறினார்.


Next Story