கம்பம் பகுதியில்முலாம் பழம் விற்பனை அமோகம்


கம்பம் பகுதியில்முலாம் பழம் விற்பனை அமோகம்
x
தினத்தந்தி 17 April 2023 12:15 AM IST (Updated: 17 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கம்பம் பகுதியில் முலாம் பழ விற்பனை அமோகமாக நடந்தது.

தேனி

கம்பம் பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். வெயிலின் தாக்கத்தில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள தர்ப்பூசணி, இளநீர், வெள்ளரிக்காய் உள்ளிட்டவற்றை வாங்கி சாப்பிட்டு வருகின்றனர். இதேபோல் ஆரஞ்சு, முலாம்பழச்சாறு ஆகியவற்றை அருந்துகின்றனர். முலாம் பழத்தில் நீர்ச்சத்து, நார்ச்சத்து, வைட்டமின் சத்து அதிகளவில் உள்ளது.

முலாம் பழம் உடலுக்கு குளிர்ச்சி தரும், சிறுநீரக பிரச்சினைக்கு சிறந்தது என்பது மட்டுமல்லாமல், அதனை வாங்கி வீட்டிலேயே பழச்சாறு செய்வது சுலபமாக இருப்பதால் பொதுமக்கள் முலாம் பழங்களை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் முலாம் பழம் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. இதன் காரணமாக கம்பத்தைச் சேர்ந்த வியாபாரிகள் சிலர் ஆம்பூர், திருவண்ணாமலை மாவட்டம் தானிப்பாடி பகுதியில் உள்ள தோட்டங்களுக்கு நேரடியாக சென்று விவசாயிகளிடம் கொள்முதல் செய்து விற்பனை செய்து வருகின்றனர்.

இதுகுறித்து கம்பத்தை சேர்ந்த வியாபாரி ஒருவர் கூறுகையில், தற்போது கோடை வெயில் வாட்டி எடுப்பதால் பொதுமக்கள் நீர்ச்சத்து மிகுந்த பழங்களை அதிகம் வாங்கி வருகின்றனர். இதனால் தர்ப்பூசணி, முலாம்பழம் உள்ளிட்ட பழங்களை வெளி மாவட்டங்களில் இருந்து கொள்முதல் செய்து விற்பனை செய்து வருகிறோம். இதில் முலாம்பழத்திற்கு பொதுமக்கள் இடையே நல்ல வரவேற்பு உள்ளது. ஒரு கிலோ முலாம்பழம் ரூ.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது என்றார்.


Related Tags :
Next Story