தேவாரத்தில்வியாபாரி வீட்டில் ரூ.90 ஆயிரம் திருட்டு


தேவாரத்தில்வியாபாரி வீட்டில் ரூ.90 ஆயிரம் திருட்டு
x
தினத்தந்தி 15 Oct 2023 6:45 PM GMT (Updated: 15 Oct 2023 6:47 PM GMT)

தேவாரத்தில் வியாபாரி வீட்டில் ரூ.90 ஆயிரம் திருடுபோனது.

தேனி

தேவாரம் அரசு மேல்நிலைப்பள்ளி தெருவை சேர்ந்தவர் செல்வி (வயது 37). இவர், தேவாரம் பஸ் நிலையம் அருகே பானி பூரி கடை நடத்தி வருகிறார். கடந்த 13-ந்தேதி இவர், வீட்டை பூட்டிவிட்டு கடைக்கு சென்றார். பின்னர் வியாபாரம் முடிந்து இரவு வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது பீரோவின் லாக்கர் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. மேலும் அதில் இருந்த ரூ.90 ஆயிரம் திருடுபோய் இருந்தது. இதுகுறித்து செல்வி, தேவாரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


Next Story