ஈரோட்டில் லியோ படம் வெளியான தியேட்டரில்' வருங்கால முதல்வர் தளபதி விஜய்' என பேனர் வைத்ததால் பரபரப்பு

ஈரோட்டில் லியோ படம் வெளியான தியேட்டரில் 'வருங்கால முதல்வர் தளபதி விஜய்' என பேனர் வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது
ஈரோட்டில் லியோ படம் வெளியான தியேட்டரில் வருங்கால முதல்வர் தளபதி விஜய் என பேனர் வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பேனர்
நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படம் நேற்று வெளியானது. ஈரோடு மாவட்டத்தில் 19 தியேட்டர்களில் இந்த படம் திரையிடப்பட்டு உள்ளது. இந்த தியேட்டர்களில் நடிகர் விஜய் மற்றும் லியோ படத்தை வாழ்த்தி ரசிகர் மன்றங்கள் சார்பில் பேனர்கள் வைக்கப்பட்டு உள்ளன.
ஈரோடு தீயணைப்பு நிலையம் எதிரில் உள்ள ஒரு தியேட்டர் முன்பு லியோ திரைப்படம் வெற்றி விழா காண வாழ்த்துகிறோம் என்று ரசிகர்களால் ஒரு பேனர் வைக்கப்பட்டு இருந்தது. அதில் அச்சிடப்பட்டு இருந்த வார்த்தைகள், நிர்வாகிகள் தங்களுக்கு போட்டுக்கொண்ட பதவிகள் ஈரோட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
வருங்கால முதல்வர் தளபதி
அந்த பேனரில் வருங்கால முதல்வர் தளபதி விஜய் என்று குறிப்பிடப்பட்டு இருப்பதுடன், ரசிகர் மன்ற மாவட்ட தலைவர் எம்.பாலாஜி வருங்கால அமைச்சர் என்று அச்சிட்டு இருந்தனர்.
மாநகர தலைவர் வருங்கால எம்.எல்.ஏ. என்றும், நிர்வாகி ஒருவர் வருங்கால கவுன்சிலர் என்றும் தங்கள் புகைப்படம் பெயருடன் அச்சிட்டு இருந்தனர். அதை பார்த்து விஜய் ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். மேலும், ரசிகர்கள் தியேட்டர்கள் முன்பு பட்டாசு வெடித்தும், குத்தாட்டம் போட்டும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.