போடியில் வீடுகளுக்குள் புகுந்த பாம்பு


போடியில்  வீடுகளுக்குள் புகுந்த பாம்பு
x

போடியில் 2 வீடுகளுக்குள் பாம்புகள் புகுந்தன

தேனி

போடி ஜெயம் நகரை சேர்ந்தவர் முருகன். நேற்று இவரது வீட்டுக்குள் பாம்பு ஒன்று புகுந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் போடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு வந்த போடி தீயணைப்பு நிலைய அலுவலர் சக்திவேல் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சுமார் அரை மணி நேரம் போராடி பாம்பை பிடித்தனர். அது சுமார் 8 அடி நீளமுள்ள சாரை பாம்பு ஆகும். அதேபோல் போடி சுப்புராஜ் நகர் வஞ்சி ஓடை தெருவை சேர்ந்த முத்து பெருமாள் என்பவரது வீட்டு்க்குள் புகுந்த 6 அடி நீள சாரை பாம்பை தீயணைப்பு வீரர்கள் பிடித்தனர்.


Next Story