காட்டுப்பகுதியில்10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு
உடன்குடி அருகே காட்டுப்பகுதியில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தொழிலாளி போக்சோ சட்ட்தில் கைது செய்யப்பட்டார்.
திருச்செந்தூர்:
உடன்குடி அருகே காட்டுப்பகுதியில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
10 வயது சிறுமி
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை அடுத்த மெஞ்ஞானபுரம் அருகே உள்ள தாய்விளையை சேர்ந்தவர் தேவராஜ் (வயது 38). தொழிலாளி. திருமணம் ஆனவர்.
சம்பவத்தன்று அந்த பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த தனது தாய்க்கு 10 வயது சிறுமி தண்ணீர் கொடுக்க சென்றாள். அவள் தண்ணீர் கொடுத்து விட்டு தனியாக திரும்பி வந்து கொண்டிருந்தாள்.
பாலியல் தொந்தரவு
இதை பார்த்த தேவராஜ் திடீரென்று அவளை வழிமறித்து வாயை பொத்தி அருகில் இருந்த காட்டுப்பகுதிக்குள் தூக்கி சென்றார். அங்கு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.
சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அவளது தாய் அங்கு கூச்சலிட்டவாறு ஓடி வந்தார். அவரை பார்த்ததும் தேவராஜ் அங்கிருந்து ஓடி விட்டார்.
கைது
இதுகுறித்து சிறுமியின் தாயார் திருச்செந்தூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, தேவராஜை கைது செய்தார்.
உடன்குடி அருகே காட்டுப்பகுதியில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தொழிலாளி கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.