தேனி மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை பாதிப்பு


தேனி மாவட்டத்தில்  108 ஆம்புலன்ஸ் சேவை பாதிப்பு
x

தேனி மாவட்டத்தில் 108 ஆம்புல்ன்ஸ் சேவை பாதிக்கப்பட்டது

தேனி

தேனி மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவையில் மொத்தம் 26 வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த வாகனங்களை இயக்கவும், அதில் மருத்துவ உதவியாளராக பணியாற்றவும் சுமார் 130 தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சமீப காலமாக வருசநாடு, தேவதானப்பட்டி, ஓடைப்பட்டி, கண்டமனூர் உள்பட மாவட்டத்தின் பல இடங்களிலும் 108 ஆம்புலன்ஸ் சேவை பாதிக்கப்பட்டு வருகிறது. தொழிலாளர்கள் பற்றாக்குறையால் இந்த பகுதிகளில் ஆம்புலன்ஸ்களை 24 மணி நேரமும் இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சிலரிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-

தேனி மாவட்டத்தில் பணியாற்றிய தொழிலாளர்கள் 8 பேர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மதுரைக்கு மாற்றுப் பணிக்காக அனுப்பப்பட்டனர். அவர்கள் மீண்டும் தேனி மாவட்ட பணிக்கு அழைக்கப்படவில்லை. இதனால், ஆம்புலன்ஸ்களை முழுமையாக இயக்குவதற்கு தொழிலாளர்கள் பற்றாக்குறை உள்ளது. இதனால், சில ஆம்புலன்ஸ்கள் அவ்வப்போது இயக்கப்படாமல் நிறுத்தப்படுகிறது. எனவே, தேனி மாவட்டத்திலேயே தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், மாற்றுப்பணி என்று வேறு மாவட்டங்களுக்கு பணிக்கு அனுப்புவதை தடுக்கவோ, கூடுதல் எண்ணிக்கையில் தொழிலாளர்களை நியமிக்கவோ அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story