திருவாரூர் மாவட்டத்தில் 87.5 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி


திருவாரூர் மாவட்டத்தில் 87.5 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி
x

திருவாரூர் மாவட்டத்தில் 87.5 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி

திருவாரூர்

பிளஸ்-1 பொதுத்தேர்வில் திருவாரூர் மாவட்டத்தில் 87.5 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.

87.5 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி

திருவாரூர் மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வு கடந்த மே மாதம் நடைபெற்றது. இந்த தேர்வில் அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள், ஆதிதிராவிடர், நகராட்சி, உதவி பெறும் பள்ளிகள், சுயநிதி பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் என மொத்தம் 227 பள்ளிகளை சேர்ந்த 6 ஆயிரத்து 468 மாணவர்கள், 7 ஆயிரத்து 389 மாணவிகள் என மொத்தம் 13 ஆயிரத்து 857 பேர் தேர்வு எழுதினர்.

தமிழகத்தில் நேற்று பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் 5 ஆயிரத்து 168 மாணவர்கள், 6 ஆயிரத்து 894 மாணவிகள் என மொத்தம் 12 ஆயிரத்து 62 பேர் தேர்ச்சி பெற்றனர். இதில் மாணவர்கள் 79.90 சதவீதமும், மாணவிகள் 93.30 சதவீதம் என மொத்தம் 87.5 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.


Next Story