தூத்துக்குடி மாநகராட்சியில்ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம்:மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு


தூத்துக்குடி மாநகராட்சியில்ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம்:மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு
x
தினத்தந்தி 1 Sept 2023 12:15 AM IST (Updated: 1 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாநகராட்சியில் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தின் செயல்பாடுகள் குறித்து மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் ஆய்வு செய்தார்.

ஆய்வு

தூத்துக்குடி மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன. அதன்படி சாலைகளும் அமைக்கப்பட்டு உள்ளன. மாநகரின் பிரதான சாலைகளை கண்காணிக்கும் வகையில் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் மாநகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் மாநகராட்சியின் முக்கிய பகுதிகள் அனைத்தும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இந்த கட்டுப்பாட்டு மையத்தில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார். அப்போது கட்டுப்பாட்டு மையத்தின் செயல்பாடுகள் குறித்து விரிவாக கேட்டறிந்தார்.

தகன மேடை

இதே போன்று தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட மேட்டுப்பட்டி பகுதியில் மின்மயானத்தில் இருந்த தகன மேடை மற்றும் அதனை சுற்றி இருந்த பகுதிகள் பழுதடைந்து இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். அதன்பேரில் அந்த மின்சார எரிதகன மேடை சீரமைக்கப்பட்டது. அந்த பணிகள் முடிவடைந்து தயார் நிலையில் உள்ளது. இதனை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார். ஆய்வின் போது அதிகாரிகள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story