திருச்செந்தூரில்சாலை மறியல் போராட்டம் வாபஸ்


திருச்செந்தூரில்சாலை மறியல் போராட்டம் வாபஸ்
x
தினத்தந்தி 25 Sep 2023 6:45 PM GMT (Updated: 25 Sep 2023 6:46 PM GMT)

திருச்செந்தூரில் சாலை மறியல் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் அருகே நா.முத்தையாபுரம் பகுதியில் உள்ள எல்லப்ப நாயக்கர் குளத்தில் அருகில் உள்ள பட்டா நிலங்களில் நிலத்தடி நீரினை லாரிகள் மூலம் விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து நா.முத்தையாபுரம் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் நேற்று சாலை மறியல் போராட்டம் நடத்த போவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து நேற்று காலையில் திருச்செந்தூர் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் வாமனன் தலைமையில் சமாதான கூட்டம் நடந்தது. கூட்டத்தில், நா.முத்தையாபுரம் எல்லப்ப நாயக்கர் குளத்தில் இருந்து திருச்செந்தூர் நகராட்சி மற்றும் பிற பஞ்சாயத்து பகுதிகளுக்கு குடிநீர் கொண்டு செல்வதற்கு எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லை. அந்த குளத்தின் அருகில் உள்ள தனியார் பட்டா நிலங்களில் இருந்து நிலத்தடி நீரினை லாரிகள் மூலம் விற்பனை செய்யும் இடங்களை கண்டறிந்து, ஊரக வளர்ச்சிதுறை மூலம் பட்டாதாரர்களுக்கு நோட்டீஸ் வழங்கி தடுக்கப்படும் என முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, நேற்று நடைபெற இருந்த சாலைமறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இந்த கூட்டத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சி சமூக நல்லிணக்கப் பேரவை மாவட்ட அமைப்பாளர் தமிழ்பரிதி, செய்தி தொடர்பு மையம் மாவட்ட அமைப்பாளர் வேம்டிமுத்து, மகளிர் விடுதலை இயக்கம் மாவட்ட துணை செயலாளர் தமிழ்செல்வி மற்றும் நா.முத்தையாபுரம் மகளிர் குழுக்களின் பொறுப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story