சத்தியில் சிறுமி கடத்தல்; போக்சோவில் வாலிபர் கைது


சத்தியில்  சிறுமி கடத்தல்; போக்சோவில் வாலிபர் கைது
x

சத்தியமங்கலத்தில் சிறுமியை கடத்தியது தொடா்பாக போக்சோவில் வாலிபர் கைது செய்யப்பட்டாா்.

ஈரோடு

சத்தியமங்கலம்

சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்தவர் 13 வயது சிறுமி. இவரை காணவில்லை என்று கடந்த 11-ந் தேதி பெற்றோர் சத்தியமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்கள். அதன்பேரில் போலீசார் சிறுமியை தேடி வந்தனர். இந்த நிலையில் போலீசார் புஞ்சைபுளியம்பட்டியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு பெண்ணுடன் வந்த ஒரு வாலிபரை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அந்த நபர் சத்தியமங்கலம் ரங்கசமுத்திரம் தேள்கரடு வீதியை சேர்ந்த அமுல்ராஜ் என்கிற அமுல்தேவ் (வயது 25) என்பதும், உடன் வந்த பெண் காணாமல் போன 13 வயது சிறுமி என்பதும், அவரை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அமுல்தேவ் கடத்தி வந்ததும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து இவர்கள் சத்தியமங்கலம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இதையடுத்து சிறுமியை போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அமுல்தேவை போலீசார் கைது செய்தனர். பின்னர் அமுல்ராஜ் ஈரோட்டில் உள்ள மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.


Next Story