தூத்துக்குடியில்சி.ஐ.டி.யு.வினர் ஆர்ப்பாட்டம்


தூத்துக்குடியில்சி.ஐ.டி.யு.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 27 Oct 2023 12:15 AM IST (Updated: 27 Oct 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி சி.ஐ.டி.யு.வினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி மாவட்ட சி.ஐ.டி.யு. சார்பில் சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் பேச்சிமுத்து தலைமை தாங்கினார். பொருளாளர் அப்பாத்துரை கோரிக்கைகளை விளக்கி பேசினார். மாநில செயலாளர் ரசல் ஆர்ப்பாட்டத்தில் நிறைவு செய்து பேசினார்.

கோரிக்கைகள்

ஆர்ப்பாட்டத்தில் போக்கு வரத்து கழகம், மின்சார வாரியங்களில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு உச்சவரம்பு இன்றி போனஸ் வழங்க வேண்டும், மத்திய அரசில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள், அங்கன்வாடி பணியாளர்களுக்கு, நலவாரியத்தில் பதிவு செய்த அனைவருக்கும் போனஸ் வழங்க வேண்டும். மத்திய அரசு, தொழிலாளிக்கு விரோதமாக உள்ள சட்டங்களை திருத்தி அனைத்து தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்கும் வகையில் சட்டத்தை திருத்த வேண்டும், போனஸ் வழங்க மறுக்கும் தனியார் நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள் டென்சிங், மாரியப்பன், பெருமாள், சிவக்குமார், காசி, சிவ பெருமாள், நிக்சன், சங்கரன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் முருகன், வையணப்பெருமாள், திருக்களத்தி, ராம மூர்த்தி, சங்கர நாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story