தூத்துக்குடியில் முதியவரிடம் ஆன்லைன் மூலம் ரூ.26 ஆயிரம் மோசடி


தினத்தந்தி 14 Jun 2023 6:45 PM GMT (Updated: 15 Jun 2023 7:06 AM GMT)

தூத்துக்குடியில் முதியவரிடம் ஆன்லைன் மூலம் ரூ.26 ஆயிரம் மோசடி செய்த மர்ம நபரை போலீசார்தேடிவருகின்றனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் முதியவரிடம் ஆன்லைன் மூலம் ரூ.26 ஆயிரம் மோசடி செய்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

ஓய்வு பெற்ற ஊழியர்

தூத்துக்குடி அண்ணாநகர் 9-வது தெருவை சேர்ந்தவர் லூர்துசாமி (வயது 60). இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். இவர் சென்னைக்கு ஒரு கூரியர் தபால் அனுப்பி இருந்தாராம். அந்த தபால் சென்றடைந்து விட்டதா? என்பதை அறிவதற்காக கூரியர் நிறுவனத்தில் வாடிக்கையாளர் சேவை எண்ணை இணையதளத்தில் தேடி உள்ளார். அதில் வந்த ஒரு எண்ணை தொடர்பு கொண்டு பேசி உள்ளார். இதனை தொடர்ந்து அவருடைய செல்போன் எண்ணுக்கு ஒரு லிங்க் அனுப்பி உள்ளனர். அதனை சில தகவல்களை பதிவு செய்து உள்ளார். அதன்பிறகு வங்கி கணக்கு விவரத்தையும் மர்ம நபர் சேகரித்து உள்ளார்.

மோசடி

அதன்பிறகு சிறிது நேரம் கழித்து லூர்துசாமியின் வங்கி கணக்கில் இருந்து இரண்டு தவணையாக மொத்தம் ரூ.26 ஆயிரம் பணம் மோசடியாக எடுக்கப்பட்டு இருப்பதாக குறுந்தகவல் வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த லூர்துசாமி சைபர் குற்றப்பிரிவு இணையதளத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் தூத்துக்குடி மாவட்ட சைபர் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த வழக்கில் தேடப்பட்டு வரும் நபர் ஜார்கண்டை சேர்ந்தவராக இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story