தூத்துக்குடியில் காதல் திருமணம் செய்த மீனவர் தூக்கு போட்டு சாவு


தூத்துக்குடியில் காதல் திருமணம் செய்த மீனவர் தூக்கு போட்டு சாவு
x
தினத்தந்தி 16 Jun 2023 6:45 PM GMT (Updated: 17 Jun 2023 7:24 AM GMT)

தூத்துக்குடியில் காதல் திருமணம் செய்த மீனவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி சுனாமிகாலனி ராம்தாஸ்நகரை சேர்ந்தவர் அலங்காரபாபு (வயது 28). மீனவர். இவர் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு ஓவியா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். கடந்த சில நாட்களாக கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டு உள்ளது. தற்போது கணவன், மனைவி 2 பேரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் மனம் உடைந்து காணப்பட்ட அலங்காரபாபு வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் தாளமுத்துநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story