தூத்துக்குடியில்பழைய போலீஸ் வாகனங்கள் பொது ஏலம் விடப்பட்டது


தினத்தந்தி 1 Sept 2023 12:15 AM IST (Updated: 1 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் பழைய போலீஸ் வாகனங்கள் பொது ஏலம் விடப்பட்டது

தூத்துக்குடி

தூத்துக்குடியில் போலீஸ சூப்பிரண்டு பாலாஜி சரவணன் முன்னிலையில் போலீசார் பயன்படுத்திய 16 பழைய வாகனங்கள் நேற்று பொது ஏலம் விடப்பட்டது.

16 வாகனங்கள்

தூத்துக்குடி மாவட்ட போலீஸ் துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 9 மோட்டார் சைக்கிள்கள், 7 கார்கள் ஆக மொத்தம் 16 வாகனங்கள் பொது ஏலம் விடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று காலை தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் உள்ள கவாத்து மைதானத்தில் பொது ஏலம் விடும் நிகழ்ச்சி நடந்தது.

பொது ஏலம்

இந்த பொது ஏலம், அதற்கான குழு தலைவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் முன்னிலையில் நடந்தது. உறுப்பினர்கள் தூத்துக்குடி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்ற தடுப்பு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோடிலிங்கம், ஆயுதப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு புருஷோத்தமன், தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலர் விநாயகம், அரசு தானியங்கி பணிமனை பொது மேலாளர் சந்திர பிரகாஷ், ஆயுதப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் ஆகியோர் முன்னிலையில் ஏலம் நடந்தது.

இதில் ஏற்கனவே வைப்புத் தொகை செலுத்தி பதிவு செய்தவர்கள் மட்டும் பங்கேற்று ஏலம் எடுத்தனர். ஏலத்தில் வாகனங்களை எடுத்தவர்கள் உடனடியாக முழு ஏலத் தொகையையும் செலுத்தி வாகனத்தை பெற்றுச் சென்றனர்.


Next Story