தூத்துக்குடியில்போலீஸ் அதிகாரிகள் ஆய்வு கூட்டம்


தூத்துக்குடியில்போலீஸ் அதிகாரிகள் ஆய்வு கூட்டம்
x
தினத்தந்தி 31 Jan 2023 12:15 AM IST (Updated: 31 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் போலீஸ் அதிகாரிகள் ஆய்வு கூட்டம் நடந்தது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து துணை போலீஸ் சூப்பிரண்டுகளுடனான ஆய்வு கூட்டம் மாவட்ட போலீஸ் துறை அலுவலகத்தில் போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து வழக்குகளின் புலன் விசாரணை குறித்தும், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும், கஞ்சா மற்றும் புகையிலை போன்ற போதைப்பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்வது குறித்தும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள், சமூக விரோதிகள் மற்றும் ரவுடிகள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், கோர்ட்டு அலுவல்கள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டன.

கூட்டத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் கலந்து கொண்டனர்.


Next Story